Posts

Showing posts from October, 2025
Image
 In the Journy of Searching  Adithya Chola முதலாம் ஆதித்தன் பள்ளிப்படை   ஆந்திர மாநிலம் , ஸ்ரீகாளஹஸ்தி அருகில் உள்ள தொண்டமானாடு என்னும் ஊரில் உள்ள கோதண்டராமசாமி எனும் ஆதித்தன் பள்ளிப்படை கோயில் இன்றும் ஒரு ராஜ்யத்தின்  வரலாற்றை தாங்கி நிற்கிறது. பள்ளிப்படைகள் இறந்த மன்னன் அல்லது அரசியாரின் நினைவாக அவர்கள் அஸ்தி மீது கட்டப்படும்.  வரலாறு என்பது வெறும் மன்னர்களும் , போர்களும் ரத்தகங்களும் தோய்ந்த கதையா? அது ஒரு சமூகத்தின் பரிணாமம் , ஒரு சமூகம் எப்படி வளர்ந்தது என்பதை காட்டும் கண்ணாடி.  ஒரு கனவையும் , காதலையும் கூட வரலாறு சுமந்து இருக்கிறது  தந்தை , சகோதரி வீழ்த்தி ஆட்சிக்கு வந்த கதைகளை கேட்டு இருப்பீர்கள் அனால் தந்தையின் மீது ஒரு மகன் கொண்ட பாசம், அவருடைய கனவை தான் சுமக்கும் பொறுப்பு , பெரும் இலக்கு , பெரும் கனவு இதை நீங்கள் கண்டதுண்டா ?  ஒரு தந்தை இறந்த செய்தி மகனுக்கு எதனை துன்பத்தை கொடுத்து இருக்கும், தன தந்தையின் நினைவை போற்றி பாதுகாக்க அவன் என்ன செய்வான். தந்தையின் கனவை, நினைவை போற்றுவதுதானே ஒரு மகனின் கடமை  ஆம் இறந்தவர் ஆதித்த சோழர், .பல...