பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் ஆலயம் | Sri Pasupatheeshwarar Temple |Devara Sthalam | Pandanallur
பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் ஆலயம் | கும்பகோண வட்டார கோயில்கள் | Sri Pasupatheeshwarar Temple | Pandanallur அன்றைய நாளின் தொடர்ச்சியாக குத்தாலம் சென்றுவிட்டு நாங்கள் சென்ற அடுத்த கோயில் பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் ஆலயம். (03.11.2025) கோயிலில் திருப்பணிகள் நடந்து கொண்டு இருந்தது , கோயிலை சென்று பார்த்தபோது மிகவும் மனவேதனை அடைந்தது . கற்றளியில் உள்ள தூண்கள் அவை முதலாம் பராந்தகன் காலகட்டத்தை சேர்ந்தவை என்று அடையாளம் காட்டின அனால் கோயில் முற்றிலும் கட்டுமானங்கள் என்ற பெயரில் சிதைக்கப்பட்டுவிட்டது. சட்டநாதருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுஉள்ளது இது மிகுந்த வருத்தம் அளிக்கும் விடயம் , கோயில் விமானத்தில் இருக்கும் சட்டநாதருக்கு எந்த காரணத்திற்காக தனி சன்னதி அமைக்க வேண்டும் ? கோயிலை கட்டியவர்கள் அதனை அமைக்காதபோது நீங்கள் ஏன் மீள் கட்டுமான செய்து மைக்கிறீர்கள் ? இது கோயிலில் கட்டுமானத்தை அதன் பழமையை சிதைக்கும் விடயம் என்று உங்களுக்கு தோன்றவில்லையா ? கோயில் முழுவதும் வர்ணங்கள் ? ஏன் ? எதற்கு ? கோயில் கற்றளி ! முழுக்க கற்களை கொண்டு செய்யப்பட்டது ! ஏன் அவைகளுக்கு வர்ணம் பூசி அதன் உண்...