Posts

Showing posts from November, 2025

பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் ஆலயம் | Sri Pasupatheeshwarar Temple |Devara Sthalam | Pandanallur

Image
பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் ஆலயம் | கும்பகோண வட்டார கோயில்கள் | Sri Pasupatheeshwarar Temple | Pandanallur அன்றைய நாளின் தொடர்ச்சியாக குத்தாலம் சென்றுவிட்டு நாங்கள் சென்ற அடுத்த கோயில் பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் ஆலயம். (03.11.2025) கோயிலில் திருப்பணிகள் நடந்து கொண்டு இருந்தது , கோயிலை சென்று பார்த்தபோது மிகவும் மனவேதனை அடைந்தது . கற்றளியில்  உள்ள தூண்கள் அவை முதலாம் பராந்தகன் காலகட்டத்தை சேர்ந்தவை என்று அடையாளம் காட்டின அனால் கோயில் முற்றிலும் கட்டுமானங்கள் என்ற பெயரில் சிதைக்கப்பட்டுவிட்டது. சட்டநாதருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுஉள்ளது இது மிகுந்த வருத்தம் அளிக்கும் விடயம் , கோயில் விமானத்தில் இருக்கும் சட்டநாதருக்கு எந்த காரணத்திற்காக தனி சன்னதி அமைக்க வேண்டும் ? கோயிலை கட்டியவர்கள் அதனை அமைக்காதபோது நீங்கள் ஏன் மீள் கட்டுமான செய்து மைக்கிறீர்கள்  ? இது கோயிலில் கட்டுமானத்தை அதன் பழமையை சிதைக்கும் விடயம் என்று உங்களுக்கு தோன்றவில்லையா ? கோயில் முழுவதும் வர்ணங்கள் ? ஏன் ? எதற்கு ?  கோயில் கற்றளி ! முழுக்க கற்களை கொண்டு செய்யப்பட்டது ! ஏன்  அவைகளுக்கு வர்ணம் பூசி அதன் உண்...

குத்தாலம் ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சுவாமி திருக்கோயில் | Kuthalam | Sri Uktha Vedheeshwara

Image
 குத்தாலம் ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சுவாமி திருக்கோயில் | Kuthalam | Sri Uktha Vedheeshwarar Temple | Devara Sthalam - 10th CE Temples கும்பகோணம் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது குத்தாலம் என்னும் ஊர். கல்வெட்டுகளில் இதன் பழைய பெயர் திருத்துருத்தி. இவூரில் உள்ள உக்தவேதீஸ்வரர் கோயில்  திருஞான சம்பந்தர் , சுந்தரர், மாணிக்கவாசகர் பாடல் பெற்ற தலம். கோயில் வரலாற்றை கொஞ்சம் பாப்போம், நவம்பர் 3 நானும் , ராஜவேல் அண்ணணும் சென்று இருந்தோம் , ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் ஒன்றாக பயணிக்கும் முதல் கற்றளி. கோயிலின் வரலாறு  கோயில் கட்டுமானம் திருத்தப்பட்டதால் அதன் காலத்தை அறிந்து  கொள்ள முடியவில்லை எனினும்  முதலாம் ராஜராஜர், முதலாம் ராஜேந்திரன் , குலோத்துங்கன், விக்கிரம சோழர் கால கல்வட்டுகள் உள்ளன.  தற்போது குத்தாலம் என வழங்கப்படும்  இவ்வூர் திருவழுந்தூர் நாட்டு திருத்துருத்தி என்று கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.  இரண்டாம் ராஜேந்திரரின் ஐந்தாம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு , கங்கைகொண்ட சோழபுரத்து பெரிய அங்காடி வியாபாரி வெண்காடன் ஆடவல்லான் தானம் கொடுத்த செய்தியை கூறுகிறத...