பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் ஆலயம் | Sri Pasupatheeshwarar Temple |Devara Sthalam | Pandanallur
பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் ஆலயம் | கும்பகோண வட்டார கோயில்கள் | Sri Pasupatheeshwarar Temple | Pandanallur
அன்றைய நாளின் தொடர்ச்சியாக குத்தாலம் சென்றுவிட்டு நாங்கள் சென்ற அடுத்த கோயில் பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் ஆலயம். (03.11.2025)
கோயிலில் திருப்பணிகள் நடந்து கொண்டு இருந்தது , கோயிலை சென்று பார்த்தபோது மிகவும் மனவேதனை அடைந்தது .
கற்றளியில் உள்ள தூண்கள் அவை முதலாம் பராந்தகன் காலகட்டத்தை சேர்ந்தவை என்று அடையாளம் காட்டின அனால் கோயில் முற்றிலும் கட்டுமானங்கள் என்ற பெயரில் சிதைக்கப்பட்டுவிட்டது.
சட்டநாதருக்கு தனி சன்னதி அமைக்கப்பட்டுஉள்ளது இது மிகுந்த வருத்தம் அளிக்கும் விடயம் , கோயில் விமானத்தில் இருக்கும் சட்டநாதருக்கு எந்த காரணத்திற்காக தனி சன்னதி அமைக்க வேண்டும் ?
கோயிலை கட்டியவர்கள் அதனை அமைக்காதபோது நீங்கள் ஏன் மீள் கட்டுமான செய்து மைக்கிறீர்கள் ? இது கோயிலில் கட்டுமானத்தை அதன் பழமையை சிதைக்கும் விடயம் என்று உங்களுக்கு தோன்றவில்லையா ?
கோயில் முழுவதும் வர்ணங்கள் ? ஏன் ? எதற்கு ?
கோயில் கற்றளி ! முழுக்க கற்களை கொண்டு செய்யப்பட்டது ! ஏன் அவைகளுக்கு வர்ணம் பூசி அதன் உண்மையான அழகே கெட்டு பார்பதற்கு கொடூரமாக உள்ளது.
கற்றளிகளை அதன் பழமையின் முகம் சிதையாமல் காப்பது தான் அந்த கோயிலை கட்டியவர்களுக்கு செய்யும் தலையாய உதவி.
சம்பந்தப்பட்ட துறைக்கு கடிதம் எழுதிவுள்ளோம் ஏதும் நடந்தால் நல்லது !
சரி இனி வரலாற்றை கொஞ்சம் கதைப்போம் ....
கோயில் கல்வெட்டுகள் :
கோயில் கட்டுமான அவை முதலாம் பராந்தகர் காலத்தை சேர்ந்தவை என்று கூறுகிறது
சோமாஸ்கந்தருக்கு தனி சன்னதி விமானத்துடன் உள்ளது
இது நடராஜருக்கு ஏற்படுத்தப்பட்ட சன்னதியாக இருக்கலாம் பின்னர் காலப்போக்கில் சோமாஸ்கந்தருக்கு அப்பணிக்கப்பட்டுவிட்டது.
நான் வர்ணம் பூசிய படங்களை இணைத்துள்ளேன் இது உண்மையில் ஒரு கற்றளி இப்படி வர்ணம் பூசுவது முறையாகாது.
கோயிலில் நடந்த திருட்டு
கோயிலில் இரண்டாம் ராஜராஜர் காலத்திய(6 ம் ஆட்சி ஆண்டு ) பழங்கல்வெட்டு ஒன்று இக்கோயிலில் நடந்த தங்கம் திருட்டு பற்றியும் அதற்கான தண்டனை பற்றியும் கூறுகிறது.
சிவபிராமணர்கள் சிலர் கோயிலின் கருவூலத்தில் இருந்து பொன் திருடியது கண்டுபிடிக்கப்பட்டு தண்டனையாக 180 காசுகள் அபராதமும் மற்றும் அவர்கள் , அவர்வழி தோன்றல்கள் கோயிலில் நுழைய தடையும் விதிக்கப்பட்டது.
Ref- Annual report on south indian epigraphy during the year 1931-32 No 115
பழங்கல்வெட்டுபடி என்று தொடங்கும் மற்றும் ஒரு கல்வெட்டு கோராஜகேசரி
பன்மற்ற்கு யாண்டு 10 ஆவது பந்தணநல்லூர் பசுபதி தேவர்க்கு காலை , மாலை விளக்கு எரிக்க பெரியநம்பி பட்டன் என்பவரும் அவர் மனைவி ப்ரம்மச்சானி என்பவரும் தானம் வழங்கிய தகவலை கூறுகிறது.
இதில் கூறப்படும் ராஜகேசரி யார் என்று தெரியவில்லை.
Refer - S.I.I vol 13 No:212.
இங்குள்ள கோயிலில் 16ம் நூற்றாண்டு பாடல் கல்வெட்டு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது "Kalingan Ellan" என்பவரை புகழ்ந்து உள்ள அந்த கல்வெட்டு
Refer - Annual report on south indian epigraphy during the year 1931-32 No 117
விக்ரமசோழரின் 9 ம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு , செம்பியன் மஹாதேவியார் ராஜராஜரின் 11ம் ஆட்சி ஆண்டில் விளக்கு எரிக்க நிவந்தம் பொன் வழங்கிய செய்தியை கூறுகிறது.
Refer - Annual report on south indian epigraphy during the year 1931 No 71
கல்வெட்டுகளின் மூலம் கோயில் உறுதியாக ராஜராஜர் காலத்தியது எனலாம்.
கட்டுமானம் மற்றும் தேவார பாடல்களின் அடிப்பையில் இதன் காலம் அதற்கும் முந்தையது.
மேற்குறிப்பிட்ட கல்வெட்டுகள் நேரில் கள ஆய்வில் கண்டறியப்பட்டு பின் இங்கு குறிப்பிட்டுள்ளேன்.
Comments
Post a Comment