In the Journy of Searching  Adithya Chola

முதலாம் ஆதித்தன் பள்ளிப்படை  

ஆந்திர மாநிலம் , ஸ்ரீகாளஹஸ்தி அருகில் உள்ள தொண்டமானாடு என்னும் ஊரில் உள்ள கோதண்டராமசாமி எனும் ஆதித்தன் பள்ளிப்படை கோயில் இன்றும் ஒரு ராஜ்யத்தின்  வரலாற்றை தாங்கி நிற்கிறது.

பள்ளிப்படைகள் இறந்த மன்னன் அல்லது அரசியாரின் நினைவாக அவர்கள் அஸ்தி மீது கட்டப்படும். 




வரலாறு என்பது வெறும் மன்னர்களும் , போர்களும் ரத்தகங்களும் தோய்ந்த கதையா? அது ஒரு சமூகத்தின் பரிணாமம் , ஒரு சமூகம் எப்படி வளர்ந்தது என்பதை காட்டும் கண்ணாடி. 

ஒரு கனவையும் , காதலையும் கூட வரலாறு சுமந்து இருக்கிறது 

தந்தை , சகோதரி வீழ்த்தி ஆட்சிக்கு வந்த கதைகளை கேட்டு இருப்பீர்கள் அனால் தந்தையின் மீது ஒரு மகன் கொண்ட பாசம், அவருடைய கனவை தான் சுமக்கும் பொறுப்பு , பெரும் இலக்கு , பெரும் கனவு இதை நீங்கள் கண்டதுண்டா ? 

ஒரு தந்தை இறந்த செய்தி மகனுக்கு எதனை துன்பத்தை கொடுத்து இருக்கும், தன தந்தையின் நினைவை போற்றி பாதுகாக்க அவன் என்ன செய்வான். தந்தையின் கனவை, நினைவை போற்றுவதுதானே ஒரு மகனின் கடமை 

ஆம் இறந்தவர் ஆதித்த சோழர், .பல்லவர்களை வீழ்த்தி வடக்கில் சோழ ராஜ்யத்தை நிறுவிய ராஜகேசரி தொண்டை நாட்டிலே தன் இன்னுயிரை ஈந்தார்.


ஆதித்தன் 

பிற்கால சோழ வரலாற்றில் அதன் தொடக்கத்தின் புள்ளி விஜயாலய சோழனால் வைக்கப்பட்டது என்றல் அதை பெரும் சாம்ராஜ்யமாக ஆகிய பெருமை முதலாம் ஆதித்தரை சேரும்.

பல்லவ மன்னன் அபராஜிதன் , கங்கமன்னன் பிருத்வி கங்கைராயனுடன் இணைந்து இரண்டாம் வரகுணனை திருப்புறம்பியதில் தோற்கடித்து விரட்டினான் . இப்போரில் கங்க மன்னன் உயிர் நீதான் , அவனுக்கு பள்ளிப்படை ஒன்றை பராந்தகன் திருப்புறம்பியதில் அமைத்தான்.


வெற்றியின் பரிசாக அபராஜிதன், ஆதித்தனின் ஆளுமையை அங்கீகரித்திருக்க கூடும். சிற்றரசனாக இருந்த சோழ ராஜியன் பேரரசின் கனவை நோக்கி தன நகர்வை தொடங்கியது.

பின்னர் , பல்லவர்கள் வலிமை குன்ற தொடங்கியதன் வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட ஆதித்தர் அபராஜிதனுடன் போரிட்டு காஞ்சியை கைப்பற்றின்னான் 

ஸ்ரீரங்கத்தில் உள்ள ராஜகேசரி கல்வெட்டுகள் இவனுடையதாக இருக்கலாம்.

இவர் ஆட்சி காளத்தி சோழதேசத்தின் எல்லை தொண்டைநாடு , கொங்கு நாடு என விரிவடைந்தது. 

இவருக்கு தொண்டைநாடு பரவின ராஜகேசரி என்ற பெயரும் உண்டு.

கும்பகோணம் அருகே தில்லைஸ்தானம் கோவிலில் கருவறை தெற்குப்புறச்சுவர் இராஜகேசரி கல்வெட்டு ஒன்று "தொண்டைநாடு பரவின சோழன் பல்யானை கோக்கண்டன்" என்று இவனை அடையாளப்படுத்துகிறது 

கொங்கு நாட்டின் மீது இவன் ஆதிக்கம் குறிப்பிடத்தக்கது.இன்று கூட கோயம்புத்தூர் உள்ள ராஜகேசரி பெருவழி இவன் பெயரால் அமைந்திருக்க கூடும். 

இவனை பற்றி கூறும் கன்னியாகுமரி கல்வெட்டு Inscription of Vera Rajendra-  ஆதித்தன் Alias கோதண்டராமன் யானை மீது அமர்ந்து இருந்த பல்லவனை போரில் வென்றான் என்று கூறுகிறது 

Refer Epigraphy of Indica  Vol .18 

இன்று அந்த கோயிலில் பழமைக்கான எந்த சுவடும் அதனிடம் இல்லை , கோயில் முழுமையாக சிதைந்து பின் மீள் கட்டுமானம் செய்யப்பட்ட அடையாளம் தெரிகிறது தீபாவளி சிறப்பு படையல் பூஜை நடந்து கொண்டு இருந்தது. 

நான் பார்த்த படித்த கல்வெட்டுகளின் பக்கங்கள் உங்களுக்காக 

பராந்தகனின் முப்பது நாலாம் ஆண்டு கல்வெட்டு 

"திருவேங்கட கோட்டத்து ஆற்றுர் நாட்டு தொண்டைமான்பேராற்றுர் ....ஸ்ரீ  கோதண்டராமேஸ்வரமாகிய ஆதித்தேஸ்வரத்து ஆழ்வார்க்கு" புரட்டாசி திங்கள் கேட்டை முதல் சதயம் வரை ஏழு நாளும் விழா எடுக்க உணவு ஏற்பாடு செய்ய , தானம் வழங்கிய செய்தியை கூருகிறது 


  

                                                     "ஆதித்தேஸ்வரத்து ஆழ்வார்"

                                                                        பள்ளிப்படை 

இந்திரா விழா

மணிமேகலையில் கூறும் இந்திரா விழா பராந்தகனின் ஆட்சி வரை தொடரந்தமைக்கான ஆதாரம் இந்த கல்வெட்டு. இந்திர விழா குறித்த முக்கிய சந்துரு இந்த கல்வெட்டு 

கல்வெட்டின் வரிகள் "இந்திரவிழாவினுக்குமாக விளக்[கினுக்கு] [நெ]ய் மேல்படி நாளைக்கு"

புரட்டாசி திங்கள் கேட்டை  முதல் சதயம் வரை ஏழு நாளும் சிறப்பாக விழா எடுக்கப்பட்டுள்ளது.

நகரதோர் வாய்த்த 105 கழஞ்சு பொன், பலசமய ஐநூற்றுவர்க்கு நிவந்தம் 

கூத்தாடுபவர் , பாடுபவர் , இலை இடுவான், நீராட்டுவான் , கலமிடும் குசவன், பூவிடு மாலைக்காரன், விறகிடுவான் ஆகியோருக்கு நிவந்தமாக நெல் , உணவு வழங்கியுள்ளனர். 

சிறப்பாக விழா எடுத்து தன் தலைவனின் நினைவை போற்றியுள்ளனர் 


Additional Info:  உத்தமசோழனின் திருமாள்புரம் கல்வெட்டு தொண்டைமானாற்றூர் துஞ்சின உடையார் என்று குறிப்பிடுகிறது, இதன் மூலம் இவர் தொண்டை நாடு சென்ற பொது அங்கு உடல்நிலை குன்றி இறந்து இருக்கலாம்.  (Refer SI vol 3 No 142)


ஒரு வீரன் உறங்குகின்றான் அவன் கனவு நினைவானது அவன் போட்ட விதை கடாரம் , ஈழம் ,கங்கை என பரவியது அவன் பூரிப்பான் தானே , இன்றும் நம்மில் பெரும்பாலானோர் சோழர்களை தான் கொண்டாடுகிறோம். அந்த கொண்டாட்டத்தின் வேர் ஆதித்தர். 


திருப்பனந்தாள் செஞ்சடையப்பர் கோயிலில் உள்ள கல்வெட்டு இவருடையதாக இருக்கலாம்.

Tamilnadu Kalvettu thoguthigal Vol 6 - By Padhmavathi (Page 22)


Comments

Popular posts from this blog

குத்தாலம் ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சுவாமி திருக்கோயில் | Kuthalam | Sri Uktha Vedheeshwara