குத்தாலம் ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சுவாமி திருக்கோயில் | Kuthalam | Sri Uktha Vedheeshwara
குத்தாலம் ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சுவாமி திருக்கோயில் | Kuthalam |
Sri Uktha Vedheeshwarar Temple | Devara Sthalam - 10th CE Temples
கும்பகோணம் - மயிலாடுதுறை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது குத்தாலம் என்னும் ஊர். கல்வெட்டுகளில் இதன் பழைய பெயர் திருத்துருத்தி.
இவூரில் உள்ள உக்தவேதீஸ்வரர் கோயில் திருஞான சம்பந்தர் , சுந்தரர், மாணிக்கவாசகர் பாடல் பெற்ற தலம்.
கோயில் வரலாற்றை கொஞ்சம் பாப்போம்,
நவம்பர் 3 நானும் , ராஜவேல் அண்ணணும் சென்று இருந்தோம் , ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் ஒன்றாக பயணிக்கும் முதல் கற்றளி.
கோயிலின் வரலாறு
கோயில் கட்டுமானம் திருத்தப்பட்டதால் அதன் காலத்தை அறிந்து கொள்ள முடியவில்லை எனினும் முதலாம் ராஜராஜர், முதலாம் ராஜேந்திரன் , குலோத்துங்கன், விக்கிரம சோழர் கால கல்வட்டுகள் உள்ளன.
தற்போது குத்தாலம் என வழங்கப்படும் இவ்வூர் திருவழுந்தூர் நாட்டு திருத்துருத்தி என்று கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.
இரண்டாம் ராஜேந்திரரின் ஐந்தாம் ஆட்சி ஆண்டு கல்வெட்டு , கங்கைகொண்ட சோழபுரத்து பெரிய அங்காடி வியாபாரி வெண்காடன் ஆடவல்லான் தானம் கொடுத்த செய்தியை கூறுகிறது.
பார்க்க - A.R No 486 of 1907 Vol -23
விக்ரம சோழர் கல்வெட்டுகளில் கோயில் சண்டேஸ்வரர் "முல விருத்தியராகிய சண்டேஸ்வர தேவர்க்கு" என்று குறிப்பிடுகிறது.
விங்கினீர்த் திருத்துருத்தி உடையார் "சொன்னவாரறிவார்" என்று இக்கோயில் ஆண்டவர் குறிப்பிடப்படுகிறார். இக்கோயிலில் அம்பாள் சன்னதி தனியாக உள்ளது.
இறைவனைப் பூசித்த அம்மைக்குக் காட்சிதந்த இறைவன் அம்பிகையின் கரம்பற்ற, அம்பிகை, தன் பெற்றோர் மகிழ விதிமுறைப்படி
மணங்கொள்ளுமாறு வேண்டினார். இறைவனும்அதற்கிசைந்து 'நாமே விதித்த விதியின்படி நடந்து உம்மை மணங்கொள்வோம்' என்று அருள்புரிந்தார். இதனால் இறைவனக்கும் 'சொன்னவாறு அறிவார்' என்று பெயர் வந்தது- தலபுராணம்
கோயிலுக்கு வழங்கப்பட்ட தானங்கள் அனைத்தும் சண்டேஸ்வர பெயரிலே மேற்கொள்ளப்பட்டுள்ளது (விக்கிரம சோழர் கல்வெட்டுகள்)
கோயிலின் தல விருட்ச்சம் " உத்தல மரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு மட்டுமே காணப்படும் மரம் என்று குறிப்பிடுகிறார்க்ள் ஆனால் அது குறித்த தெளிவான தகவல்கள் தெரியவில்லை.
சிற்பங்கள்
குறுஞ்சிற்பங்கள் அழகிய நிலையில் உள்ளன ,
Location:
https://maps.app.goo.gl/ZygAjSFDiphGvRRA8
கும்பகோணம் டூ மயிலாடுதுறை செல்லும் பேருந்துகள்.
Comments
Post a Comment